இசை பேரறிவாளன் இமான்!

Music-Composer-D-Imman-Press-Meet-Photos-12விஜய் நடித்த தமிழன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். ஆனால், பின்னர் அவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் ஹிட்டாகாததால் பின்தங்கியிருந்த அவரை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால், மைனா படத்திற்கு பிறகு தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் இமான் தற்போது கவனிக்கப்படும் இசையமைப்பாளராகியிருக்கிறார்.

அதனால். தனது பெயருக்கு முன்பு எந்தவொரு பட்டத்தையும் இதுவரை சூட்டிக்கொள்ளாத அவருக்கு என்னமோ ஏதோ படககுழுவினர் இசை பேரறிவாளன் என்று பட்டம் சூட்டியுள்ளனர். அதோடு அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா போஸ்டர்களில் இமானின் படத்துடன் இந்த பட்டத்தையும் கொட்டை எழுத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.