ஆர்யாவுக்கு போட்டி நடிகரை உருவாக்கிய பார்த்திபன்!

sபார்த்திபன் இயக்கத்தில் அடுத்த மாதம வெளியாகயிருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இந்த படத்தில் முழுக்க முழுக்க இயக்குனராக மட்டுமே செயல்பட்டுள்ள பார்த்திபன், முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைக்க முதலில் திட்டமிட்டவர், பின்னர் கமர்சியல்கருதி, விஷால், ஆர்யா, அமலாபால், டாப்சி, பிரகாஷ்ராஜ், இயக்குனர் சேரன் ஆகியோரை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்துள்ளார்.

மேலும்,. இப்படத்தில் கதையே இல்லை என்று சொல்லும் பார்த்திபன், சுவராஸ்யான சம்பவங்களின் தொகுப்புதான் இப்படம். அதுவும் பாதி படத்துககு பிறகுதான் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதே ரசிகர்களுக்கு புரியும்.

மேலும்,. இந்த படத்தில் சந்தோஷ் என்றொரு புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன். மாடலிங் துறையில் இருந்து வந்திருக்கும் இவருக்கு ஏகப்பட்ட பெண ரசிகைகள் உள்ளனர். அதனால் அடுத்து இவர் ஆர்யாவுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் உருவெடுப்பார் என்று தெரிவித்தார்.

மேலும், ஆர்யாவை புத்தகம் படத்தின் ஆடியோ ரிலீஸ் மேடையில் பிக்கப் நடிகர் என்று அம்பலப்படுத்தியவரே பார்த்திபன்தான். அதையடுத்து இப்போது இந்த சந்தோஷ் முதல் படத்தில் நடித்தபோதே அவரைப்பற்றிய தகவலை மேடையேற்றியிருக்கிறார்.ஆக, கோலிவுட்டில் இன்னொரு பிக்கப் நடிகர் தயாராகி விட்டார்.