அஷ்வின் – ஸ்வாதி ரெட்டி நடிக்கும் திரி!

sddddதன் பொறுமையைக் காப்பவன் தான் சிறந்த வீரன். தேவைப்படும் இடத்தில் நேரம் பார்த்து அந்த பொறுமையை துறப்பதும் அத்தியாவசியம் என்பதை கூற வருகிறது ‘திரி’. சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.கே. பாலமுருகன் மற்றும் ஆர். பாலகோபி தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் அசோக் அமிர்தராஜ்.
“ ‘திரி’ யதார்த்தம் நிறைந்த கமர்சியல் பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகி வருகிறது. அஷ்வின் கக்கமனு, ஸ்வாதி ரெட்டி, ஜெயபிரகாஷ், கருணாகரன் மற்றும் AL அழகப்பன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். ‘திரி’ என்பதை தூண்டிவிட வேண்டும். அந்த தூண்டல் தீபதிர்க்ககவும் இருக்கலாம், தீப்பந்தமாகவும் மாறலாம். எனிமும் தூண்டல் ஒன்றுதான்.

“ ‘தாயை போல பிள்ளை’ என்ற பழமொழி என்னை பாதித்தன் விளைவுதான் இந்தக் கதை. ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் பெற்றோர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்ற அடிப்படையில் மனித உணர்வுகளை மையமாக இப்படத்தை படமாக்கியுள்ளேன்.”

“ ‘ சதுரங்க வேட்டை’ புகழ் கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவில், ராஜா சேதுபதி படத்தொகுப்பில், ‘தளபதி’ தினேஷ் சண்டையமைப்பில், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைரமான வரிகளில் இசையமைத்துள்ளார் SS தமன்.

“விறுவிறுப்பான திரைக்கதையோட்டதுடன் அமைந்துள்ள இப்படத்தில் அஷ்வின் தனது முந்தைய படங்களில் இல்லாத அளவுக்கு நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இப்படம் அவருக்கும் புதிய உயரத்தை கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை..‘திரி’ குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்.” என்றுக் கூறினார்.” இயக்குனர் அசோக் அமிர்தராஜ்.

Cast

அஷ்வின் கக்கமனு – Ashwin Kakamanu
ஸ்வாதி ரெட்டி – Swathi Reddy
ஜெயபிரகாஷ் – Jayaprakash
கருணாகரன் – Karunakaran
AL அழகப்பன் – AL Azhagappan
அனுபமா குமார் – Anupa Kumar
சென்ட்ராயன் – Sendryan

Crew
Direction – Ashok Amirthraj இயக்கம்- அசோக் அமிர்தராஜ்.
Music – SS Thaman இசை – SS தமன்
Lyrics – Vairamuthu பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
DOP – KG Venkatesh ஒளிப்பதிவு – கே.ஜி. வெங்கடேஷ்
Editing – Raja Sethupathy படத்தொகுப்பு – ராஜா சேதுபதி
Production: Seashore Gold Productions தயாரிப்பு: சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்
Producer: AK Balamurugan and R Balagopi தயாரிப்பாளர் – ஏ.கே. பாலமுருகன் ஆர். பாலகோபி