அப்பாவுக்கு எம்.ஜி.ஆர்…மகனுக்கு விஜய்…!

mgr.vijaiபிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். பாக்யராஜ்-பூர்ணிமா திருமணத்தன்று எம்.ஜி.ஆர் நேரில் வந்து தாலியை தன்னுடைய கையால் எடுத்து கொடுத்து ஆசிர்வதித்தார். அதுமட்டுமின்றி தன்னுடைய கலையுலக வாரிசு என கே.பாக்யராஜை அவர் அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று கே.பாக்யராஜின் மகன் சாந்தனு திருமணம் சென்னையில் வெகு சிறப்பாக நடந்தது. இந்த திருமணத்தில் கலந்து கொண்ட இளையதளபதி விஜய், சாந்தனுவுக்கு தனது கையால் தாலியை எடுத்து கொடுத்து ஆசி செய்தார். அப்பா பாக்யராஜுக்கு எம்.ஜி.ஆரும், மகன் சாந்தனுவுக்கு விஜய்யும் தாலி எடுத்து கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்தனுவுக்கு இதுவரை சரியான படங்கள் அமையவில்லை எனினும் விரைவில் வெளியாக இருக்கும் ‘வாய்மை’ படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுமனைவி வந்த நேரத்தில் அவரது வாழ்க்கையும் புதுமையாக மாறும் என்பதே அனைவரின் விருப்பம்.