அஞ்சலி மீதுள்ள கோபத்தை பிரியங்கா மீது காண்பித்த மு.களஞ்சியம்!

hqdefaultஇயக்குனர் களஞ்சியம் இயக்கும் ஊற்சுற்றி புராணம், அஞ்சலி பிரச்னையால் முடங்கிப்போனதால் இப்போது அவர் நடிக்க கிளம்பி விட்டார். லாரா, கோடைமழை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கோடைமழை படத்தின் படப்பிடிப்புகள் சங்கரன் கோவில் பகுதியில் நடந்து வருகிறது. நேற்று ஒரு வீட்டில் படபிடிப்பு நடந்தது. கதைப்படி தங்கையாக நடிக்கும் பிரியங்கா, அண்ணனுக்கு பிடிக்காத ஒருவனை காதலிப்பதால் அது தொடர்பாக விவாதம் முற்றி அண்ணன் களஞ்சியம், தங்கை பிரியங்காக கன்னத்தில் அறைவது போன்ற காட்சி எடுத்தார்கள்.

ஒத்திகையில் களஞ்சியம் மெதுவாக அடித்தார். அது ஓகே ஆனது. காட்சி படமானபோது காட்சி படு யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக களஞ்சியம் பிரியங்காவை நிஜமாக அடித்தாக கூறப்படுகிறது. இதனால் வலி தாங்காமல் பிரியங்கா மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பிரியங்காவுக்கு காதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், சமீபகாலமாக அஞ்சலி மீது கடும் கோபத்தில் இருந்து வரும் மு.களஞ்சியம், தற்போது எந்த நடிகையைப்பார்த்தாலும் டென்சன் ஆகி விடுகிறாராம். ஆக, அஞ்சலி மீதுள்ள கோபத்தைதான் அவர் பிரியங்கா மீது காண்பித்திருப்பதாக கூறப்படுகிறது.