அஜீத்-கெளதம்மேனன் வாக்குவாதம்!

Ajith-Gautham-Menonமங்காத்தாவில் இருந்து தனது நிஜ தோற்றமான சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் கெட்டப்பிலேயே நடித்து வரும் அஜீத், தனது 55வது படத்திலும் அதே கெட்டப்பில்தான நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அஜீத்தை யூத்தாக காண்பிக்க நினைத்த கெளதம்மேனன், ஆரம்பத்திலேயே டை அடித்துக்கொண்டு நடிக்குமாறு அஜீத்திடம் சொன்னாராம்.

அதற்கு, இதுதான் எனது நிஜ கெட்டப். எனக்கு வயது 40 கடந்து விட்டதால் முடி நரைத்து விட்டது. அதனால், அதே தோற்றத்துடன் ரசிகர்கள் முன்பு தோன்றவே நான் ஆசைப்படுகிறேன் என்று முடியை கருப்பாக்கிக்கொண்டு நடிக்க மறுத்து விட்டாராம் அஜீத்.

அதேசமயம், இதே படத்தில் இரண்டு கெட்டப்பில் நடிப்பவர் இன்னொரு இளமையான வேடத்தில் டை அடித்துக்கொண்டு நடிக்கிறாராம். கதைப்படி அது இளமையான கேரக்டர் என்பதால், அதில் அப்படித்தான் தோன்ற வேண்டும் என்று கூறிய அஜீத், எத்தனை பெரிய ஹீரோவாக இருந்தாலும், வயது ஆக ஆக தலைமுறை தானாக நரைத்து விடும. ஆனால், ரசிகர்கள் முன்பு அதை மறைத்து நம்மை இளமையாக காட்டிக்கொள்ளும் போலித்தனம் எனக்கு பிடிப்பதில்லை. அதற்காகவே எனது நிஜ கெட்டப்பில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறிவிட்டாராம்.

அஜீத் இப்படி சொன்னது கெளதம்மேனனுக்கு மனசுக்கு சங்கடமாகி விட்டது என்றாலும், இப்படத்தில் இரண்டு கெட்டப்பில் அஜீத் நடிப்பதால், ஒருவர் நரைமுடி கெட்டப்பிலும், இன்னொரு இளமையாகவும் தோன்றுவதும் கதைப்படி சரியான விசயம்தான என்பதால், அதையடுத்து அஜீத்திடம் அதுகுறித்து எந்த வாக்குவாதமும் செய்யவில்லையாம் கெளதம்மேனன்.